Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், சாந்தன்,முருகன், நளினி உள்ளிட்ட 7 நபர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இதில், பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை பெற தமிழக அரசு பரோல் வழங்கி உத்தரவிட்டது. உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரது தாயார் அளித்த மனுவின் பேரில் இந்த பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு கடந்த 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
சிறுநீரக அறுவை சிகிச்சைசெய்துகொண்ட பேரறிவாளன் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று (ஆக. 12) தனது இல்லத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்பு ரம் - புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். உடன் அவரது தாயார் அற்புதம்மாளும் வந்திருந்தார். பேரறிவாளன் 2 நாட்கள் தங்கி பரிசோதனை செய்து கொண்டு வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT