Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

நெய்வேலியில் நிலக்கரி லாரி மோதி - உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க தொடர்ந்து மறுப்பு :

கடலூர்

நெய்வேலி அருகே மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந் தன் (48) என்எல்சி இரண்டாம் அனல் மின் நிலைய சொசைட்டி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது மனைவி திலகத்துடன் (40) இருசக்கர வாகனத்தில் சென்றார். என்எல்சி அனல்மின் நிலையத்தில் இருந்து

நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் கோவிந் தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலகம் படுகாயமடைந் தார். விபத்தைக் கண்டு ஆத்தி ரமடைந்த அப்பகுதி மக்கள் நிலக்கரி சாம்பல் ஏற்றிச் சென்ற 5 லாரிகளை தீயிட்டு எரித்தனர். மேலும் 5-க்கும் மேற்பட்ட லாரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதற்கிடையே விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தனின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் வாங்க மறுத்து விட்டனர். உயிரிழந்த கோவிந்தனின் வாரிசுக்கு என்எல்சியில் வேலை வேண்டும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத் திய லாரி ஓட்டுநர் கும்பகோணம், கிளை காட்டு இருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (25) என்பவரை போலீஸார் கைது செய்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x