Published : 13 Aug 2021 03:17 AM
Last Updated : 13 Aug 2021 03:17 AM
மதுரை அவனியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள டேபிள், சேர் உட்பட 14 வகையான கல்வி உபகரணங்களை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் விவி.ராஜன் செல்லப்பா தனது சொந்த செலவில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், அவனியாபுரம் பகுதிச் செயலாளர் எஸ். முருகேசன், சரவணன், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT