Published : 13 Aug 2021 03:17 AM
Last Updated : 13 Aug 2021 03:17 AM

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் : சிவகங்கை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு

சென்னை

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியதற்கான விருதுக்கு சிவகங்கை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகள் நீலகிரி-இன்னசன்ட் திவ்யா, சிவகங்கை- பி.மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த நிறுவனமாக திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டியும், சமூக பணியாள ராக நாகர்கோவிலைச் சேர்ந்த மரிய அலோசியஸ் தவமணியும், சிறந்த மருத்துவராக சென்னையைச் சேர்ந்த பூ.பத்மபிரியாவும், அதிகளவு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனமாக சென்னை வி.ஆர்.யுவர் வாய்ஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர்கள் தவிர மற்றவர்களுக்கு சுதந்திர தினத்தன்று விருது மற்றும் ரொக்கத்தொகையை முதல்வர் வழங்குகிறார். மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் போது விருது வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x