Published : 13 Aug 2021 03:17 AM
Last Updated : 13 Aug 2021 03:17 AM
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதில் நடை பெற்ற முறைகேடு தொடர்பான அறிக்கை அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகளை சிண்டிகேட் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலகட்டத்தில் இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டது. இது தொடர்பான வழக்கில் பதவி உயர்வு முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். இருப்பினும் முறைகேட்டில் தொடர்புடைய வர்கள் மீது இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை. பதவி உயர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பதவி உயர்வு முறைகேடு தொடர்பாக பேராசிரியர் தேர்வு குழு அளித்த அறிக்கை, அதன் மீது சிண்டிகேட் எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT