Published : 13 Aug 2021 03:17 AM
Last Updated : 13 Aug 2021 03:17 AM
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே சந்தைவிளையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்குபணியாற்றும் ஊழியர் குமார் என்பவர் நேற்று முன்தினம் இரவுகடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. கடைக்குள் வைத்திருந்த விலைஉயர்ந்த மதுபான பாட்டில்கள்மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குமார் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் சாணத்தை பூசி மறைத்து விட்டு, கேமரா மற்றும்அலாரம் ஒலிக்கும் கருவியை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. திருட்டு போன மது பாட்டில்கள் மற்றும் பணத்தின் மதிப்பு குறித்து கடை ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT