Published : 13 Aug 2021 03:17 AM
Last Updated : 13 Aug 2021 03:17 AM
காரைக்கால், கோட்டுச்சேரி காவல் நிலையங்களில் புதுச்சேரி டிஐஜி நேற்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே நேற்று மாலை காரைக்காலுக்குவந்தார். அவரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் வரவேற்றார். மாநிலத்தில் சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, புதுச்சேரியில் சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தேர்ந்தெடுப்பதற்காக காரைக்கால் நகர காவல் நிலையம், கோட்டுச்சேரி காவல் நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள், போலீஸாரின் சமூக நலன், காவல் நிலைய பராமரிப்பு, தூய்மை உள்ளிட்டவை குறித்து டிஐஜி ஆய்வு மேற்கொண்டார். மேலும், காரைக்காலில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக, அதிகாரிகளிடம் டிஐஜி நீண்ட நேரம் விசாரித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT