Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

ஏற்றுமதி தரத்திலான டி-சர்ட், பனியன் - ஈரோட்டில் 25 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை :

ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கத்தில் டெம்டேஷன் நிறுவனத்தின் ஏற்றுமதி தரம் மிக்க பனியன், டி-சர்ட் விற்பனை நடந்து வருகிறது.

ஈரோடு

ஈரோடு சம்பத் நகர் கொங்கு கலையரங்கத்தில், திருப்பூர் டெம்டேஷன் பிராண்டட் பனியன் நிறுவனம் சார்பில் பனியன் விற்பனை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து டெம்டேஷன் விற்பனை மேலாளர் கூறியதாவது:

ஈரோடு கொங்கு கலையரங்கில் நடக்கும் கண்காட்சி மற்றும் விற்பனையில், 2 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கான, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பனியன் ஆடைகள், டி-சர்ட் ஆடைகள் விற்பனைக்குள்ளது. அத்துடன், அனைத்து வயதிலான ஆண், பெண்களுக்கு ஏற்ற பனியன், டி-சர்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கு பல்வேறு விதமான வண்ண உடைகள் விற்பனைக்குள்ளன. ஏற்றுமதி தரம் கொண்ட டி-சர்ட்டுகள், பனியன் வகைகள் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. டி-சர்ட்டுகள் ரூ.90 முதல் ரூ.340 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக பனியன் ஆடைகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி வரை இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x