Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
புதுச்சேரி தனி தேர்வாணையம் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது என்று மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத் தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள், மருத்துவமனை யில் உள்ள மருத்துவர் பணியிடங்கள் மற்றும் பல்வேறு துறைக ளில் உள்ள முக்கியமான பதவிகளுக்குரியவர்களை தேர்வு செய்துபணியமர்த்துகின்ற வேலையை மத்திய அரசின் கீழுள்ள மத்தியபணியாளர்கள் தேர்வாணையக் குழுதான் செய்து வருகிறது.
பல்வேறு மாநிலத்தில் இருந்துபுதுச்சேரிக்கு தேர்வுசெய்யப்படு பவர்களுக்கு புதுச்சேரி மக்களால் பேசப்படும் தமிழ் மொழி தெரிவதில்லை. இதனால் புதுச்சேரி மக்களால் தங்களுடைய குறையை அவர்களிடம் சரியாக எடுத்து கூற முடிவதில்லை.
மேலும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் சில ஆண்டுகள் மட்டுமே புதுச்சேரியில் பணிபுரிந்து விட்டு மீண்டும் தங்கள் மாநிலத்திற்கே பணிமாறுதல் பெற்று, சென்று விடுகின்றனர். அந்தப் பணியிடங்கள் அதிக நாட்கள் காலியாக உள்ளன.
இதை சரி செய்யும் நோக்கில் புதுச்சேரிக்கு என்று தனித் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியானது பல முறை எடுத்தும் கூறியிருக்கிறது.
தற்போது மத்தியிலும், மாநி லத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக தனது தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு என தனி தேர்வா ணையம் அமைப்பதாக அறிவித்திருந்தது. இந்த தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது பாஜக தலைவர் சாமி நாதன், தற்போதைய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அந்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக ஒரு உறுதிமொழியை தந்துள்ளனர். அதனடிப்படையில் நான் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினேன்.
அதாவது, புதுச்சேரி பணியாளர் களுக்கு தேர்வாணையம் தேவை என்று எடுத்து கூறியிருந்தேன். அதற்கு மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில்தர முடியாது என முழுமையாக மறுத்துள்ளனர். இதன் காரணமாகபுதுச்சேரி இளைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் மத்தியில் இருக்கும் பாஜக தலைவர்கள் ஒன்றாக இணைந்து பொய்யான வாக்குறுதியை தந் துள்ளனர் என்பது மீண்டும் உறுதி யாகியுள்ளது.
ஏற்கெனவே நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தியதற்கும் வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு பதில் அளித்து விட்டது. ஆனால் புதுச்சேரி தேர்தல் அறிக்கையில் மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பதாக உறுதியளித்திருந்தது.
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி யில் உள்ள என்.ஆர்.காங்., பாஜக ஒன்றாக இணைந்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அழுத்தம் தந்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளபடி தேர்வாணையத்தை கொண்டு வர வேண்டும். நிதிக்குழுவில் புதுச்சேரியில் சேர்க்க வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் அளித்துள்ள அனைத்தையும் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT