Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சியில் - புதுவையில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி சொத்துகள் அபகரிப்பு : விரிவான விசாரணை நடத்த அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி

கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சியில் போலி ஆவணங்கள் மூலம் புது வையில் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக புதுச் சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரியில் கடந்த திமுக- காங்கிரஸ் ஆட்சியில் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் போலிபத்திரம் தயாரித்தல், ஆள்மாறாட் டம் செய்து வெளி நாடுகளில் வசிப்போர் மற்றும் யாரும் இல்லாத முதியோர்களின் சொத்துக்கள் குறிவைத்து அபகரித்தல் போன்ற செயல்கள் நடைபெற்றி ருக்கின்றன.

பல்வேறு கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் போலியாக அரசு முத்திரை, ஆதார்கார்டு தயாரித்தும் போலி கையெ ழுத்து மூலம் ஆவணங்களை தயார் செய்தும், நிலத்தை அபகரித்து, பிளாட் போட்டு விற்பனை செய்தும் தடையின்றி மோசடி நடந்து வருகிறது.

பேராசிரியர் மும்தாஜ் பேகம் என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் காலி நிலத்தை வேறோரு நபரை மும்தாஜ் பேகம் போன்று செட்டப் செய்து நிலத்தை அபகரித்துள்ளனர். அந்த போலி நபர் வில்லியனூரில் வசிப்பதாக போலி ஆதார் கார்டு, தயாரித்து மோசடி செய்துள்ளனர்.

காரைக்கால் மாவட்ட திமுகவின் இளைஞரணி துணை அமைப்பாளர் ஒருவர் (கட்டபொம்மன் (எ) செந்தில்குமார்) உள்ளிட்ட ஒருசிலர் மீது வழக்குப்பதிவு செய்துள் ளனர். இந்த நடவடிக்கை போது மானது இல்லை.

காரைக்காலில் திமுக உள்ளிட்ட ஒருசில அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மாபியா கும்பல் போன்று சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேலுள்ள பிறருடைய சொத்துக்களை அபகரித்துள்ளனர். இதற்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு துறையில் பணிபுரியும் பல உயரதிகாரிகள் உடந்தையாக உள்ளளர்.

கடந்த15 ஆண்டுகளுக்கு முன்பே திமுக ஆட்சியில் பாதிக் கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸ் நாட்டில் புகார் அளித்ததன் அடிப்படையில் பலகட்ட விசாரணைகள் நடந்தன. அதேபோன்று கடந்த திமுக- காங்கிரஸ் ஆட்சியிலும் போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு நடந்துள்ளது.

முதல்வர் ரங்கசாமி இதுதொடர் பாக உயர்மட்ட விரிவான விசார ணைக்கு உத்தரவிட வேண்டும்.

விசாரணைக்கு முன்பாக போலி பத்திரம் தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், போலி பத்திரங்களை பதிவு செய்த அதிகாரிகள், போலி ஆதார் கார்டு வழங்கிய அதிகாரிகள் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் பெறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x