Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
சாத்தூர் அருகேயுள்ள அச்சங் குளத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (55). விதிமீறல் காரணமாக பந்துவார்பட்டி கிராமத்தில் உள்ள இவரது பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் உரிய அனுமதி பெறப்பட்டு ஆலையில் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை எடுப்பதற்காக அறையைத் திறந்த போது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடினர். சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT