Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியின் 30 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும் அடைப்புகளை மனித ஆற்றல் மூலமே நீக்கும் நிலை இருந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இப்பணிக்காக ரூ.44 லட்சம் மதிப்பிலான ரோபோட்டிக் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT