Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

கிருஷ்ணகிரியில் கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் துறை ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் தேவிசேனா கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், 7 மாதங்களுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்த்திருத்துறையால் தாமதப்படுத்தப்படும் துணைப் பதிவாளர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். மாநிலம் முழுவதும் கூட்டுறவு சார் பதிவாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாகவுள்ள நிலையில், களப்பணியில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு சிறப்பினமாக தற்காலிகமாக கூட்டுறவு சார் பதிவாளர் பணியிடங்களில் பதவி உயர்வு அளிப்பதன் மூலம் களப்பணிகள் தொய்வின்றி நடைபெற நட வடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சார் பதிவாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், இளநிலை ஆய்வாளரில் இருந்து முதுநிலை ஆய்வாளர் மற்றும் அதற்கு கீழ் உள்ள பதவி உயர்வையும் உடன் வழங்கி, காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x