Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் விருசம்பட்டி ஊராட்சி மாமுநயினார்புரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பொது பாதையில் புதிய சாலை அமைக்க வேண்டும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சமாதான கூட்டம் நடந்தது. 15 நாட்களில் மின் இணைப்பு கொடுக்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விளாத்திகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் (விநியோகம்) அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் புவிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் 19 -ம் தேதிக்குள் மின்இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT