Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM
நாகர்கோவில் மேற்கு ரதவீதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(55). இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
`நகைக்கடைகளுக்கு கமிஷன் அடிப்படையில் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். நாகர்கோவிலில் நகைக்கடை நடத்திவரும், ஹென்றிதெருவைச் சேர்ந்த அருள்ராஜுக்கு நகை கொடுத்து வந்தேன். சென்னையில் வைத்து அவரது மகனிடம் இரு தவணையாக ரூ.48 லட்சம் கொடுத்தேன். மேலும் என்னிடம் நகை, பணம் வாங்கியதில் அருள்ராஜ், அவரது மகன் ஆகியோர் ரூ.7 கோடி தரவேண்டும்.அருள்ராஜ் என்னிடம் காசோலை வழங்கினார். வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும்’ என புகார் அளித்திருந்தார். அருள்ராஜ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT