Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

ஓசூர் சீதாராம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி -ஆட்சியர் பாராட்டு :

கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரவிழாவில் சிறப்பாக செயல்பட்ட வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி சான்றிதழ்களை வழங்கினார். அருகே சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன்.

கிருஷ்ணகிரி

ஓசூர் மாநகராட்சி, சீதாராம் நகரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு, தடுப்பு பணி மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து சிறப்பாக செயல் புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் முன்னிலை வகித்தார்.

ஆட்சியர் பேசியதாவது: கரோனா தடுப்பூசியின் அவசியத்தை சுகாதாரத் துறை அலுவலர்கள் எடுத்துக் கூற வேண்டும். கரோனா 2-வது அலை தொற்றின் போது முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தடுக்கப்பட்டது. மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள் 30,776 நபர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 20,704 நபர்களுக்கும், 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட 3,51,743 நபர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட 1,84,171 நபர்களுக்கும், 60 வயதிற்கும் மேற்பட்ட 86,417 நபர்கள் என மொத்தம் 6,73,811 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஓசூர் மாநகராட்சி, சீதாராம் நகரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் செலுத்தி மாவட்ட அளவில் முன்மாதிரி சுகாதார நிலையமாக உள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x