Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
கரோனா தொற்றால் உயிரிழந்த சுகாதார ஊழியர்க ளின் குடும்பத்தினருக்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் கிடைக்கப் பெற்ற நிலையில், இறந்த சுகாதார ஊழியர்களின் குடும்பத்தினர் முதல் வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் 9 பேர் பணியின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். குறிப்பாக கரோனா 2-வது அலையின்போது செவிலிய அதிகாரி நிரஞ்சனா, சுகாதார ஆய்வாளர் ஆனந்த், சீனியர் லேப் டெக்னீஷியன் பார்த்தசாரதி, நர்சிங் ஆர்டர்லி அனுசுயா, ரங்கநாதன் மற்றும் வார்டு அட்டெண்டன்ட் மாயகிருஷ்ணன் ஆகியோர் கரோனாவால் இறந்தனர்.
இவர்களுக்கு பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் கிடைக்க சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் கிடைக்கப்பெற்ற நிரஞ்சனா, மாயகிருஷ்ணன், அனுசுயா ஆகிய ஊழியர்களின் குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், சுகாதார இயக்குநர் ராமலுவையும் சந்தித்து நன்றி கூறினர். இச்சந்திப்பின்போது சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கீதா, பொதுச்செயலாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT