Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
புதுச்சேரி மூலகுளத்தில் வசிப்பவர் தமிழ்வாணன் (57). காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக் டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா (28). இவருக்கும், லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் வசிக்கும் மதிவாணன் மகன் ஹரிபிரசாத் (31) என்பவ ருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சீர் வரிசை பொருட்களை அளித்துள்ளனர். தற்போது அனிதாவிடம் கூடுதலாக நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கேட்டு ஹரிபிர சாத் சித்ரவதை செய்ததாகவும், அவரது தந்தை மதிவாணன், தாய் புவனேஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT