Published : 11 Aug 2021 03:18 AM
Last Updated : 11 Aug 2021 03:18 AM

இளைஞர் கொலையால் மனமுடைந்து - பழநியில் பெண் தற்கொலை :

பழநி

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே இளைஞர் கொலையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொலையாளி பழநி நீதிமன்றத்தில் சரண டைந்தார்.

பழநி அருகே சின்னக்கலையமுத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா (41). இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் நடத்திய விசாரணையில் விக்டோரியா வுக்கு அய்யனார் என்ற கணவரும், திருமண வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மேலும் குடும்பத்தைப் பிரிந்து பாப்பம்பட்டியைச் சேர்ந்த பத்மநாபனுடன் அவர் பழகி வந்தது தெரியவந்தது.

விக்டோரியா எழுதி வைத்த கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், பத்மநாபனை சங்கர் என்பவர் கொலை செய்தததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

போலீஸார் உடனே அப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது விக்டோரியாவின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் பத்மநாபன்(31) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

குடும்பத்தைவிட்டுப் பிரிந்த விக்டோரியாவுக்கும், பத்மநாபனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டுக்கு அருகேயிருந்த சங்கர் (32) என்பவருடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு விக்டோரியாவும், பத்மநாபனும் தனியாக இருந்ததைப் பார்த்த சங்கர், ஆத்திரமடைந்து பத்மநாபனைக் கொலை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த விக்டோரியா தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. பழநி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடிவந்த நிலையில், பழநி சார்பு நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x