Published : 11 Aug 2021 03:18 AM
Last Updated : 11 Aug 2021 03:18 AM

சீர்காழி அருகே கார் மோதிய விபத்தில் - 9 மாத கர்ப்பிணி, கணவர் உட்பட 3 பேர் மரணம் : உறவினர்கள் சாலை மறியல்

விபத்தை ஏற்படுத்திய கார். (அடுத்த படம்) கார் மோதியதில் நிலை குலைந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்.

மயிலாடுதுறை

சீர்காழி அருகே நேற்று கார் மோதிய விபத்தில், 9 மாத கர்ப்பிணி, அவரது கணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மணல்மேடு கிழாய் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(36). இவரது மனைவி தமிழ்வாணி(30). புருஷோத் தமன் 9 மாத கர்ப்பிணியாக இருந்த தமிழ்வாணியை மருத்து வப் பரிசோதனைக்காக நேற்று வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கற்கோயில் உடையாம்பாளை யம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தமிழ்வாணி, புருஷோத் தமன் இருவரும் படுகாய மடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து, வேகமாக சென்ற கார், 100 நாள் வேலை முடித்து விட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த, உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மனைவி தையல்நாயகி(52), சந்திரகாசு மனைவி ராணி (60) ஆகியோர் மீதும் மோதியது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தையல் நாயகி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணி முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதற்கிடையே காரை ஓட்டிவந்தவர் காரை சாலையி லேயே நிறுத்திவிட்டு, தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

விபத்தில் 3 பேர் இறந் ததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் கள், கடப்பாரையால் காரை அடித்து நொறுக்கினர்.

விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடையாம்பாளையம் பிரதான சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் சண்முகம் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கார் ஓட்டுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

விபத்தில் கர்ப்பிணி உயிரிழந் தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x