Published : 11 Aug 2021 03:19 AM
Last Updated : 11 Aug 2021 03:19 AM
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு செயல்முறை ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ராவுத்தன்பட்டி ஏரியில் நீரில் மூழ்கிய வரை மீட்கும் செயலமுறை ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் துணை வட்டாட்சியர் ரேவதி, தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் முன்னிலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். இதில், மழைக்காலங்களில் தாழ்வானப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? என்றும் ஏரி, குளம், குட்டையில் தவறி விழுந்தவர்களை மீட்பது எப்படி என்றும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு செயல்முறை ஒத்திகையை செய்து காண்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT