Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
உடுமலை அடுத்த வடபூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (75). விவசாயி. இவரது மனைவி அமராவதி. தனக்கு சொந்தமான நிலத்தில் நடராஜன் விவசாயம் செய்து வந்தார். நடராஜனின் தம்பி மகன் பாபுவின் பராமரிப்பில் தம்பதி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 4-ம் தேதி வீட்டைவிட்டு வெளியில் சென்ற நடராஜன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், உடுமலை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் அங்குள்ள தோட்டத்தில் நடராஜன் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் அவர் உயிரிழந்தது குறித்து உடுமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT