Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
லாப நோக்கம் இல்லாமல் அஞ்சல் துறை இந்திய அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தை நடத்துகிறது. மற்ற திட்டங்களை விட குறைந்த பிரீமியம், அதிக போனஸ் இதில் வழங்கப்படுகிறது.
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரும் சேரலாம்.செலுத்தும் பிரீமியத் தொகை மற்றும் முதிர்வு தொகைக்கு முழுமையான வரி விலக்கு உண்டு.
புதுச்சேரி அஞ்சல் கோட்டத் திற்குட்பட்ட (புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி) அனைத்து தலைமை அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள், கிளை அஞ்சல் நிலையங்களில் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம்இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
24,25 தேதிகளில் முகாம்
பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். புதுச்சேரி கோட்ட அஞ்சலகங் களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவபிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT