Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

பொங்கல் வைத்து தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்த ஆளுநர் தமிழிசை :

அம்மனுக்கு வைக்கப்பட்ட பொங்கலை வேப்பிலைக் கட்டி, தலையில் சுமந்து எடுத்துச் செல்லும் ஆளுநர் தமிழிசை.

புதுச்சேரி

ஆடி மாத பாரம்பரிய நிகழ்வில் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து அம்மனுக்கு படைத்து ஆளுநர் தமிழிசை வழிபட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகவும் உள்ளார். வாரத்தின் பாதி நாட்கள் புதுவையில், மற்ற நாட்களில் தெலங்கானாவில் என இரு மாநில பொறுப்புகளையும் நிர்வகித்து வருகிறார்.

தமிழகத்தில் ஆடி மாத வழிபாடு சிறப்பு வாய்ந்தது. ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசையில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதேபோல் தெலங்கானாவில் இம்மாதத்தில் ‘போனாலு’ என்ற பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நிறைவு விழா ஆடி அமாவாசை அன்று நடக்கும்.

இந்நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் இருந்து தெலங்கானா சென்றுள்ளார்.

ஆடி அமாவாசையான நேற்றுமுன்தினம் நடைபெற்ற போனாலு திருவிழாவில் தெலங்கானா ராஜ்பவனில் பெண்கள் பொங்கல் வைத்து, தலையில் சுமந்து சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ராஜ்பவனில் நடைபெற்ற வழிபாட்டில் ஆளுநர் தமிழிசையும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். அங்கு, அவர் பொங்கல் வைத்து, அதை தலையில் சுமந்து சென்று, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x