Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
`வெள்ளையனே வெளியேறு’ இயக்க நினைவு நிகழ்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் நேற்று புதுச்சேரியில் சைக்கிள் பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசமி, மாநில தலைவர் சுப்பிரமணியன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "நம் நாட்டின் சுதந்திரம் நரேந்திர மோடி அரசால் பறிபோகியுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய பாஜக அரசு மக்களை வஞ்சித்துள்ளது. மோடி அரசை தூக்கி எறிந்தால் தான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும், இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி உள்ளது. வரும் 2024ல் மோடி அரசை தூக்கியெறிந்து ராகுலை பிரதமராக கொண்டு வருவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT