Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தற்கொலையை மறைத்து இளம்பெண் உடல் எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருப்புவனம் அருகே மேலவெள்ளூரைச் சேர்ந்த முனீஸ்வரன் மகள் திவ்யா (18). இவர் ஆக.8-ம் தேதி அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாருக்கு தெரிவிக்காமல், அவரது உறவினர்கள் திவ்யா உடலை அங்குள்ள மயானத்தில் எரித்தனர். இதுகுறித்து மேலவெள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் ரம்யாதேவி அளித்த புகாரில் திருப்புவனம் போலீஸார் திவ்யாவின் தந்தை முனீஸ்வரன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT