Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
கொடைக்கானல் மலைப் பகுதியில் கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைப்பதற்கு திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தடை விதித்திருந்தார். இந்நிலையில், கொடைக்கானல் வட்டாட்சியர் சந்திரன், டி.எஸ்.பி ஆத்மநாபன் ஆகியோர் கொடைக்கானல் மேல்மலைப் பகுதி கூக்கால் மலை கிராமத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு திறந்தவெளியில் 5 இடங்களில் கூடாரங்கள் அமைத்து சுற் றுலா பயணிகள் தங்க வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கூடாரம் அமைத்த நபர்கள், பணியாளர்கள், நிலத்தின் உரிமையாளர்கள், தங்கிய சுற்றுலா பயணிகள் உட்பட 20 பேர் மீது கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT