Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

ராமேசுவரம் திமுக பிரமுகரின் நிறுவனம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை : முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் திமுக பிரமுகர் வீடு, அவருக்குச் சொந்தமான விடுதி மற்றும் மீன் நிறுவனத்தில் மத்திய அமலாக்கத் துறையினர் நேற்று முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம் அங்காள ஈஸ்வரி கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வில்லாயுதம் (53). தொழிலதிபரான இவர் மாவட்ட திமுக மீனவர் அணிச் செயலாளராகவும் உள்ளார். இவர் மீது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்து, இலங்கைக்குக் கடத்த முயன்றதான குற்றச்சாட்டின் பேரில், சமீபத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். தற் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வில்லாயுதம் வரு மானத்துக்கு அதிகமாக சொத்து களை வாங்கி குவித்ததாகவும், அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை எனவும் மத்திய அமலாக்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராமேசுவரத்தில் வில்லாயுதத்துக்குச் சொந்தமான வீடு, தங்கும் விடுதி, மீன் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறையினர் 8 பேர் கொண்ட குழுவினர் மற்றும் 25-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வருமானத்துக்கு மீறி அவர் சொத்து சேர்த்த விவரங்கள், வங்கி பணப் பரிவர்த்தனை, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அம லாக்கத் துறையினர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x