Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM
வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று கோரிக்கை களை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வுபெற்ற பணியாளர்க ளுக்கு, மாவட்ட தீர்வாய தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மூலம் நேரடியாக ஊதியம் வழங்குவதுபோல, திருமருகல் ஒன்றியம் பனங்குடி யில் உள்ள சென்னை பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, ஆக.3-ம் தேதி நாகை கோட் டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சுமுக தீர்வு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் அமுத விஜயரங்கன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT