Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM
சாத்தூர் நகராட்சியில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ ரகுராமன் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: சாத்தூர் நகராட்சியில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட் டுள்ளது. சாத்தூர் நகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 13 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் பேருக்கு ஒருவார காலத்தில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT