சிவகங்கை அருகே வேம்பத்தூரில் சீரமைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. (உள்படம்) ரமேஷ்குமார்
சிவகங்கை அருகே வேம்பத்தூரில் சீரமைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. (உள்படம்) ரமேஷ்குமார்

சிவகங்கை அருகே சொந்த பணத்தில் - பள்ளியை சீரமைத்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு :

Published on

சிவகங்கை அருகே வேம்பத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 75 மாணவர்கள் படிக்கின்றனர். ஓட்டுக் கட்டிடத்தில் உள்ள இப்பள்ளி சேதமடைந்து இருந்தது. கரோனா ஊரடங்கால் ஒன்றரை ஆண்டாக பள்ளியைத் திறக்காததால் மேலும் சிதிலம் அடைந்திருந்தது.

இதையடுத்து அப்பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், தனது சொந்த பணத்தில் பள்ளியைச் சீரமைத்துள்ளார்.

மேலும் பள்ளி முழுவதும் மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில் ஓவியங்களுடன் வர்ணம் பூசியுள்ளார். இவர் 2007-ம் ஆண்டு இப்பள்ளியில் சேர்ந்தார். அன்றில் இருந்து தற்போது வரை மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.

மேலும் இவர் ஆண்டுதோறும் பள்ளி சார்ந்த செயல்பாடுகளில் தனது சொந்த பணத்தில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து வந்துள்ளார். தலைமை ஆசிரியரின் இத்தகைய செயல்பாட்டை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in