Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சிக்கு உட்பட்ட தையாலுமூடு பகுதியில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தையாலுமூட்டில் இருந்து அம்சிகாகுழி காமராஜர் நகர் வரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப் பணியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இதுபோல் சூழால் ஊராட்சிக் குட்பட்ட காட்டுக்கடையில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் காட்டுக்கடை முதல் பிலாவிளை முடிப்பாறை வரை புதிதாக அமைக்கப்படும் சாலை பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். சாலைப் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களிடம் அவர் அறிவறுத்தினார். நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT