Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு - தற்காலிகமாக 65 பேரை நியமிக்க முடிவு : தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு துறைகளில் 65 பேர் பணி நியனம் செய்யப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் டாக்டர். அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுதுறை ஆணைப் படி ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.

அதன்படி அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சி.ஆர்.ஏ., படிப்பு முடித்த 5 பேர் நுண்கதிர் வீச்சாளராகவும், டயாலிசிஸ் முடித்த 10 பேர் டயாலிசிஸ் டெக்னீசியனாகவும், அதேபோல சி.டி ஸ்கேன் டெக்னீசியன் 5 பேர், மயக்கவியல் நிபுணர் 15 பேர், ஆய்வுக்கூட நுட்புநர் 5 பேர், டி.பார்ம்.,முடித்த மருந்தாளுநர் 5 பேர், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 15 பேர் என மொத்தம் 65 பேர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகளின்படி பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

இது தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டுமே பணி நியமனமாகும். விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் வரும் 10-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x