Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM
திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள லட்சுமி மோட்டார்ஸ் மல்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டர் நிறுவனத்தில் 4-வது புதிய கிளை திருவானைக்காவல் டிரங்க் ரோடு புறவழிச்சாலை சோதனை சாவடி அருகே நேற்று தொடங்கப்பட்டது.
விழாவுக்கு லட்சுமி குழுமத் தலைவர் தீனதயாளன் தலைமை வகித்தார். புதிய கிளையை கட்டிடக் கலை வல்லுநர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிர்வாக இயக்குநர் சங்கர், செயல் இயக்குநர் கேசவ் ராகுல் கூறியது: டாடா கார்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டராக கடந்த 16 ஆண்டுகளாக லட்சுமி மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அனைத்து கார்களுக்கும் சர்வீஸ் வசதியை வழங்கும் வகையில் லட்சுமி மோட்டார்ஸின் மல்டி பிராண்ட் கார் சர்வீஸ் சென்டர்கள் திருச்சி- கரூர் புறவழிச்சாலை மற்றும் கரூர் அண்ணாமலை நகரில் தொடங்கப்பட்டன.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது திருவானைக்காவலில் தொடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக அனைத்து கார்களுக்கும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் போம் சர்வீஸ் மற்றும் வீல் அலைன்மென்ட் இலவசமாக செய்து தரப்படும்.
பென்ஸ், பிஎம்டபிள்யு, ஜாகுவார், ஆல்டோ, ஆடி கார்கள் உட்பட அனைத்து விதமான கார்களுக்கும் ஒரே இடத்தில் சிறந்த சர்வீஸ் கிடைக்கும் என்றனர்.
விழாவில், மோகன், சிவக்குமார், தினேஷ்குமார், சுசீந்திரன், பாலமுருகன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT