Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM
உலகத் தமிழ் மாநாட்டை திருச்சி யில் நடத்தக் கோரி வெளி நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங் களிடம் ஆதரவு பெற முயற்சித்து வருவதாக இலக்கிய அமைப்பு களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
11-வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, சோழ மண்டல இலக்கிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் க.சிவகுருநாதன், திருக்குறள் கல்வி மையத் தலைவர் சு.முருகானந்தம், கம்பன் கழக செயலாளர் ரா.மாது, பா.குமரவேல் (வானம்), சேதுராமன்(களம்), மு.நடராசன் (சமூக சிந்தனை மேடை), இளஞ்சேட்சென்னி (லால்குடி அறம் தமிழ் வளர்ச்சி பேரவை), ரங்கராஜன் (தமுஎகச), சாகுல் அமீது (சத்தியசோலை), முகமது ஜாபர் (எஸ்.ஐ.ஓ), ஜெக நாதன், ஷ்யாம் சுந்தர் (டைட்ஸ்) மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தது:
தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி 25 ஆண்டு களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இம்முறை அந்த மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் இதுதொடர்பாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த இசைவு தெரிவித்துள்ளன. அவர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களைப் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT