திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 01 Aug, 2021 06:30 AM
Published : 01 Aug 2021 06:30 AM Last Updated : 01 Aug 2021 06:30 AM
வருசநாடு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள மலை கிராமம் முத்துநகர். இங்கு 25 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு நக்சல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் கவுதம் தலைமையில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்துவதின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ந.ரஞ்சித்குமார் சொந்தப் பணத்தில் இருந்து அரிசி, போர்வைகள், புத்தாடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். குழந்தைகளுக்கு காலணி, பள்ளிச் சீருடைகள் அளிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT