Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

கிருஷ்ணகிரி கே.வி.எஸ்.சீனிவாசன் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற முன்னாள் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற முன்னாள் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன். இவர் ரஜினி மக்கள் மன்றம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விலகினார். இதனிடையே நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து கே.வி.எஸ்.சீனிவாசன் திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும், திமுக சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.வி.எஸ்.சீனிவாசன் (கிருஷ்ணகிரி), ஏவிகே ராஜா (மத்திய சென்னை), பகவான் பரமேஸ்வர் (கரூர்), மகளிரணியினர் விஜயலட்சுமி (காஞ்சிபுரம்), கவிதா (திருவண்ணாமலை), கீதா கலைவாணி (கோவை), யமுனா (விழுப்புரம்), மீனா சீனிவாசன் (மத்திய சென்னை) ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இதுதொடர்பாக கே.வி.எஸ்.சீனிவாசன் கூறும்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எங்களை திமுகவில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவின் கொள்கைகளைப் பின்பற்றி மக்கள் பணியில் ஈடுபடுவோம் என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x