Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம் படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் மற்றும் ரிஷி வந்தியம் ஆகிய 2 வட்டாரங்களைச் சார்ந்த 97 ஊராட்சிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரகப் புத்தாக் கத் திட்டத்தில் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1,079 நபர்களுக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கள் மூலம் நீண்ட கால தனிநபர் தொழில் கடனாக மொத்தம் ரூ.3.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்டி கடை, சிறு உணவகம், மளிகை கடை, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பு நிறுவனம் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் 7 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 2,620 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன் றுக்கு ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ.40.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையினை கொண்டு கரோனாகாலத்தில் எதிர்கொண்ட இடர்பாடுகளை களையவும், விவசா யத்திற்கான இடுபொருட்கள் சந்தைப்படுத்துதல், செக்கு எண்ணெய்தயாரிப்பு போன்ற செயல்பாடு களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத 90 இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.90 லட்சம் நீண்ட கால கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் பணியாற்றிய பகுதிகளுக்கு செல்லாமல் சொந்த கிராமத்திலேயே முதலாளிகளாக இயன் மருத்துவம், வாடகை பாத்திரக்கடை, மளிகை கடை, அழகு நிலையம், நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.
கரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற் றோரின் தொழில் மேம்பாட்டுக்காக தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் 844 நபர்களுக்கு, தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.1.21 கோடி நீண்ட கால கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலமாக கரோனா சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.6.39 கோடிக்கு கடனுதவி வழங் கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 4,633 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT