Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு :

கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் குழந்தைகள் நலக் குழுவிற்கு 2 உறுப் பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக் கப்பட உள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர்கள் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப்பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

குழந்தைகள் நலக்குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை (செய்தி வெளிவந்த நாளில் இருந்து 15 நாட்கள் வரை) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 312,317, 2-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் 607 001 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x