Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் கரோனா கட்டுப்பாடுகளுடன் 132 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. மேலும், நகர்புற, ஊர்ப்புற நூலகங்களுக்காக சுமார் 1.50 லட்சம் புத்தகங்களை பிரித்து விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர் களுக்கு வசதியாக நூலகங்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட மைய நூலகங்கள், நகர்புற மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் நேற்று முதல் வாசகர்களுக்காக திறக்கப்பட்டன.
வேலூர் அண்ணா சாலை அருகே தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மைய நூலகம் உள்ளது. இங்கு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அரசின் உத்தரவைத் தொடர்ந்து கரோனா விதிகளுடன் நூலகம் நேற்று காலை முதல் செயல்பட தொடங்கியது.
நூலகத்துக்கு வரும் வாசகர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், நூலகத்தின் வெளியே கைகளை கழுவ வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
மேலும், நூலகத்தின் உள்ளே வாசிப்புப் பகுதியில் மூன்று அடி இடைவெளி உள்ள நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம். ஒருவரிடம் இருந்து மற்றவர்கள் பொருட்களை பரிமாற்றம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
வேலூர் மாவட்ட மைய நூல கத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 132 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்கள் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு பிரிவுகளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1.50 லட்சம் புத்தகங்கள்
வேலூர் மைய நூலகம் கட்டுப்பாட்டில் உள்ள குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள நகர்புற மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக 4 ஆயிரம் தலைப்பு களில் தமிழ் புத்தகங்கள், 2 ஆயிரம் தலைப்புகளில் ஆங்கில புத்தகங்கள் என சுமார் 1.50 லட்சம் புத்தகங்கள் வரப்பெற்றுள்ளன. இந்தப் புத்தகங்களை நூலகங் களுக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கும் பணியில் மைய நூலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT