Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களுக்கான உதவி மையம் திறப்பு : கட்டணமில்லா தொலைபேசி, வாட்ஸ்-அப்பில் புகார் தரலாம்

பொதுமக்களுக்காக, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட உதவி மையத்தை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, கட்டணமில்லா தொலைபேசி, வாட்ஸ்-அப் எண்களையும் வெளியிட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கான உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களுக்காக மாவட்ட உதவிமையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்ததோடு, மையத்தை தொடர்பு கொள்வதற்கான கட்டணமில்லா தொலைபேசி, வாட்ஸ்-அப் எண்களையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட மாவட்ட உதவிமையம் வாரத்தில் 7 நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படும். இம்மையத்தை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005997626, வாட்ஸ்-அப் எண் 98403 27626 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு, தங்களது அனைத்து வகையான புகார், கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்கப்படும் கோரிக்கை, புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட உதவி மையம் தொடர்பான விளம்பர பலகைகள் பல்வேறு அரசு அலுவலகங்களில் வைக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x