Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு இதுநாள் வரை பொறுப்பு நீதிபதிகளே பதவி வகித்து வந்தனர். தற்போது நிரந்தர நீதிபதியாக எம் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து நேற்று நீதிபதி எம் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டப்பிரிவு 22- A ன் படி விவரிக்கப்பட்ட சேவைகள் சம்மந்தமான குறைபாடு, தவறு இழைக் கப்பட்டது என கருதினால் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். பயணிகள், சரக்கு , நில, நீர்வழி போக்குவரத்து, அஞ்சல், தொலைபேசி சேவை, பொது சுகாதாரம், காப்பீட்டுச் சேவை, கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்ந்த சேவை, வீடு மற்றும் வீட்டுமனை சேவை உள்ளிட்ட சேவை குறைபாடுகளுக்கு இந் நீதிமன்றத்தை அணுகலாம்.
மேலும் நேரடி மக்கள் நீதிமன் றத்தை அணுக கட்டணம், வழக்க றிஞர்கள் தேவையில்லை. பொது மக்கள் தங்களின் மனுக்களை நீதிமன்றங்கள் செயல் படும் நேரங்களில் நேரடியாக அளிக்கலாம். இங்கு வழங்கப்படும் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும். தீர்ப்புக்கான நிறைவேற்று மனுவை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அதிகபட்சம் ஒரு மாதத்தில் தீர்ப்பளிக்கப்படும். எதிர்தரப்பினர் வரவில்லை என்றால் ‘எஸ் பார்ட்டி’ தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல் கடலூரிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இதற்கான மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “மக்கள் பல்வேறு பி ரச் சி னை க ளு க் கு ம் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதில், பொது பயன்பாட்டு சேவையாக வரையறை செய்யப்பட் டுள்ள தபால், தொலைபேசி, போக்கு வரத்து சேவை, மின்சாரம், ஒளி, நீர் ஆகிய பொதுத்துறையினரால் வழங்கப்படும் சேவை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சேவை, மருத்துவமனை மற்றும் மருந்தகம் சேவை, காப்பீட்டுச் சேவை, மனை விற்பனை குறித்த சேவை, கல்வி நிலையங்கள் குறித்த சேவைகள் குறித்து பிரச்சினைகள் எழுகின்ற போது அதன் தரப்பினர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி மனுத்தாக்கல் செய்து தங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். இதற்காக எந்த செலவும் செய்ய வேண்டாம்.
வழக்கறிஞர் இல்லாமல் சாதா ரண மனுவாகவே வழங்கலாம்.நிரந்தர மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்வினை அந்தந்த உள்ளூர் உரிமையியல் நீதிமன்றங்களின் மூலம் நிறைவேற்றப்படும். நிரந்தரமக்கள் நீதிமன்றத்திற்கும், மக்கள்நீதிமன்றத்திற்கும் வேறுபாடு உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மட்டுமே செய்ய முடியும்.ஆனால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். எனவே, மக்கள் பொது பயன்பாட்டுசேவையாக வரையறைசெய்யப்பட்டுள்ள பிரச்சினைகளில் கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயன் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT