Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM

கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் வரையிலான 180 கி.மீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை (என்.எச்.66) இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இப்பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் 11 ஆண்டுகளாக குண்டும், குழியும், புழுதியான இச்சாலையில் மக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுடன் சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை விரிவாக்க பணிகள் 2-ஆக பிரித்து மேற்கொள்ள ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி உள்ளதாக, கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் தெரிவித்தார்.

அதன்படி பணிகள் மேற்கொண்டு வந்தநிலையில், கரோனா ஊரடங்கால் சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, ஒரு மாதமாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை விரிவாக்கம் செய்து, சாலை அமைக்கும் பணி தொய்வின்றி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதன் மூலம் 11 ஆண்டுகளாக அவதியுற்று வரும் வாகன ஓட்டிகளும், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x