Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம்செய்த அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களிடம் கூறியது:
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா நடந்ததற்கான எந்த தடயமும் இல்லை. எனவே, கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் இருக்கும் 10 அடி உருவபொம்மை வைக்கப்படும்.
பல முக்கிய கோயில்களில் பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுவாமி புறப்பாடு உள்ளிட்டவைபவங்கள் நடைபெறவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இனியாவது சுவாமி புறப்பாடு நடத்த அறநிலையத் துறை அனுமதி வழங்க வேண்டும். அதேபோல, ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல் நிகழ்வுக்கு அறநிலையத் துறை தானியங்கள் வழங்கி உதவ வேண்டும்.
பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த சட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம், வழக்கம்போல இந்து ஒற்றுமை விழாவாக நடத்தப்படும். சில இடங்களில் விநாயகர் சிலை உற்பத்திக்கு போலீஸார் தடை விதித்து வருகின்றனர். விநாயகர் ஊர்வலத்தை சிறப்பாக நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT