Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM
விழுப்புரம் காமராஜர் சாலை யில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று மாலை ஆட்டோவில் 3 பேர் வந்தனர். அங்கு பணியிலிருந்த பெண் ஊழியரிடம் மணியார்டர் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். நேரம் முடிந்துவிட்டது என்று அந்த ஊழியர் கூறியுள்ளார். உடனே ரூ. 2 ஆயிரத்திற்கு சில்லரை கேட்டுள்ளனர். அவர், உள்ளே உள்ள கருவூலத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதே நேரம் நேற்று வசூலான பணத்தை கருவூலத்தில் வைக்க மேஜை மீது பணக்கட்டுகளை தபால்நிலைய ஊழியர்கள் வைத்திருந்தனர். அங்கு சென்ற 3 பேரும் ரூ. 2 ஆயிரம் பணக்கட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு, வெளியில் தயாராக இருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT