Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM
கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கக் கோரி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேசிய எதிர்ப்பு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரன் கண்டன உரையாற்றினார். வருவாய்த்துறை அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை சங்க நிர்வாகிகள் ஜெகதாம்பிகா, கல்யாண சுந்தரம், வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதேபோல் தருமபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட நிர்வாகிகள் சேகர், புகழேந்தி, இளவேனில் ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும். கரோனா தொற்று நோயால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்த தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT