Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும், நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூத்தாநல்லூர் கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலாளர் ராபின்செல்வன் தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மக்களவைத் தொகுதி செயலாளர் என்.டி.இடிமுரசு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கூத்தாநல்லூர் நகர அரசு மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். போதிய மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT