Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM
விழுப்புரம் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டுககு 191 பட்டம் பயின்றோருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.50 ஆயிரம் பணமும், 10, 12-ம் வகுப்பு படித்த 1,146 நபர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் பணமும் என 1,337 நபர்களுக்கு ரூ.3.82 கோடி நிதியுதவியும், 10.69 கிலோ தங்கமும் வழங்கப்பட உள்ளது.
அதன்படி செஞ்சி, மேல்மலை யனூர், வல்லம், மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களுக்கு செஞ்சி, மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் திண்டிவனத்தில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் பங்கேற்று, பட்டம் பயின்ற 82 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.50 ஆயிரம் பணமும், 10, 12-ம் வகுப்பு படித்த 484 பேருக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் பணமும் என மொத்தம் 566 பேருக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான 4.528 கிலோ கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.1.62 கோடி மதிப்பிலான நிதியுதவி என ரூ.3.65 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT