Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பைத் தொடர்ந்து ஹோட்டல்கள் திறக்கப்பட்டதால், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழை இலைகள் மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆத்தூர் பகுதியில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக அதிக பரப்பில் வாழை பயிரிடப்படுகிறது. பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி என பலவகை வாழை பயிரிடப்படுகிறது. வாழை பழத்துக்கு முன்னதாக, வாழை மரத்தில் இலைகளை அறுத்து விற்பனைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக ஹோட்டல்கள் திறக்கப்படாமல் இருந்தன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து 50 சதவீதம் பேர் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வாழை இலைக்கு மீண்டும் கிராக்கி ஏற்பட்டது. ஆத்தூர் பகுதியில் வாழைத்தோப்புகளில் இருந்து வாழை இலைகளை அறுத்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேன்கள் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது. 250 வாழை இலைகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.300-க்கு விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT