Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு :

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மானோஜிபட்டி பல்லவன் நகரைச் சேர்ந்தவர் மோகன்(40), ரயில்வே ஊழியர். இவர் நேற்று முன்தினம் ஈரோட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர், நேற்று திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு மற்றும் வீட்டுக்குள்ளிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, 5 பவுன் நகை, ரூ.1.40 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x